மேலும் செய்திகள்
புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்
31-Dec-2024
பாலக்கோடு: கோவில் திருவிழா நடத்துவது குறித்து, பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில், இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடந்தது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, பேளாரஹள்ளியில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் வேளாவள்ளி மண்டு பகுதியில் திருவிழா கொண்டாடுவது வழக்கம். சமீப காலமாக, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்-பட்டு வருகிறது. இதில், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை, மண்டு பகுதியில் பொங்கல் அன்று திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருதரப்பிற்கும் மோதல் உரு-வாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், தாசில்தார் ரஜினி, இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில், இரு தரப்பின-ரையும் அழைத்து, நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்-தப்பட்டது. இதில், இரு தரப்பினரும் கருத்து வேறுபாடு, பாகுபா-டுகளை மறந்து ஒன்றிணைந்து திருவிழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டது. இதை இருதரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஏற்றுக்கொண்டு எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். இதில், பேளாரஹள்ளி, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், ஊர்மக்கள் மற்றும் கோவில் விழாக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
31-Dec-2024