உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுனை நீர்வடிப்பகுதி திட்டம்சார்பில் அதிகாரிகள் ஆய்வு

சுனை நீர்வடிப்பகுதி திட்டம்சார்பில் அதிகாரிகள் ஆய்வு

பென்னாகரம், பென்னாகரம் அருகே, சுனை நீர்வடிப்பகுதி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பென்னாகரம் ஒன்றியம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுனை நீர்வடிப்பகுதி திட்டத்தின் சார்பில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. வேளாண்மை துறை சார்பில் நடைபெறும் பணிகளில், பண்ணை குட்டை அமைத்தல், சுனை நீர்வடிப்பகுதிகளில் தடுப்பணை கட்டுதல், விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண்மை இடுபொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திட்ட பணிகளை தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் துணை வேளாண்மை இணை இயக்குனர் பூங்கோதை, உதவி வேளாண்மை இயக்குனர் மணமல்லி, உதவி பொறியாளர் குணசீலன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ