உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முதியவருக்கு 3 சென்ட் நிலம் வழங்கிய அதிகாரிகள்

முதியவருக்கு 3 சென்ட் நிலம் வழங்கிய அதிகாரிகள்

பாப்பிரெட்டிப்பட்டி: பள்ளி கட்ட இடம், 80 சென்ட் நிலத்தை தானம் கொடுத்த முதிய-வருக்கு, காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, அதிகாரிகள், 3 சென்ட் நிலம் வழங்கினர்.தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த ரேகடஹள்ளி ஊராட்சி, ஜாலி புதூரை சேர்ந்தவர் முருகேசன்,63; கூலிதொழிலாளி. இவர், 2006 ல் ஜாலி புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைய, தன் 80 சென்ட் விவசாய நிலத்தை தானமாக கொடுத்தார். அப்-போது அவருக்கு, 5 சென்ட் இடம்,வேறு இடத்தில் அரசு சார்பில் கொடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை வழங்-காமல் இருந்தனர். 18 ஆண்டுகளாக அதிகாரி களிடம், 50க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் கொடுத்தும், எவ்வித நடவடிக்-கையும் இல்லை. இதுகுறித்து, கடந்த, 18 ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் படி, தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான கௌரவ்குமார், பாப்பிரெட்-டிப்பட்டி தாசில்தார் வள்ளி, கடத்தூர் பி.டி.ஓ., கலைச்செல்வி, பொம்மிடி ஆர்.ஐ., விமல், ரேகடஹள்ளி வி.ஏ.ஓ., தமிழரசன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் நேரடியாக ரேகட-ஹள்ளி, ஜாலிப்புதூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசு பள்ளிக்கு நிலம் தானம் செய்த முருகேசனை அழைத்து, கூடுதல் கலெக்டர் விசாரணை செய்தார்.பின் முதியவர் முருகேசனுக்கு ரேகடஹள்ளி, முல்லை நகரில் கிராம நத்தத்தில் உள்ள, மூன்று சென்ட் நிலத்தை இலவசமாக கொடுத்து அளந்து அத்து காட்டி வழங்கினர். முருகேசன் மகிழ்ச்சி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி