உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டடத்தை, காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். நபார்டு திட்டத்தின் சார்பில், 64.08 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக மூன்று வகுப்பறை கட்டடங்களும், மொரப்பூர் அடுத்த முத்தானுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 78.24 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வகம் கட்டப்பட்டுள்ளன. மேலும், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 502.22 லட்சம் ரூபாய் மதிப்பில், 5 வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.தர்மபுரி தி.மு.க., எம்.பி., மணி, கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ