மேலும் செய்திகள்
கலெக்டர் ஆய்வு
11-Dec-2024
வளர்ச்சி திட்ட பணிகளைவிரைந்து முடிக்க உத்தரவுதர்மபுரி, டிச. 25-தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலவாடி பஞ்., கூரம்பட்டியில், 9.97 லட்சம் மதிப்பில் தானியகிடங்கு அமைக்கும் பணி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில் முனியப்பன் கோவில் முதல் பாலவாடி ஏரி வரை ஏரி கால்வாய் ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார். இண்டூர் பஞ்.,ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் மற்றும் பேடறஹள்ளி பஞ்., பூச்செட்டிஹள்ளியில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலகம் கட்டும் பணியை ஆய்வு செய்து, இப்பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, நல்லம்பள்ளி உதவி பொறியாளர் சுமதி உள்பட பலர் உடனிருந்தனர்.
11-Dec-2024