உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதல் நிறுத்தம்

அரூர், நரிப்பள்ளியில் நெல் கொள்முதல் நிறுத்தம்

அரூர், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில், நடப்பு, 2024--2025 சம்பா பருவத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், அரூர் மற்றும் நரிப்பள்ளியில், கடந்த, மார்ச், 11 முதல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்விரு கொள்முதல் நிலையங்களிலும், 659 விவசாயிகளிடமிருந்து, 2,533 டன் நெல் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.தற்போது சம்பா நெல் அறுவடை முடிவடைந்து, நெல் வரத்து குறைந்துள்ளதால், அரூர் மற்றும் நரிப்பள்ளியில் இயங்கி வரும், 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள், இன்று, (ஜூலை, 31) முடிவுக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் இருப்பின் நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித் துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !