மேலும் செய்திகள்
அடிப்படை வசதி கேட்டு காக்களூர் மக்கள் மறியல்
03-Oct-2025
ஏரியூர், அ ஏரியூர் ஒன்றியம், தொன்னகுட்டஅள்ளி பஞ்., சீலநாய்க்கனுார், தொன்னகுட்டஅள்ளி, அத்திமரத்துார் அதை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் தொலைதொடர்பு வசதியின்றி அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இன்றைய சூழலில் அணைத்து கணினி மையமாக்கப்பட்ட நிலையில், தொலை தொடர்பு வசதியின்றி, இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள், வங்கி, மருத்துவம் பார்க்க மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. தொலைதொடர்பு வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி கற்றலிலும் பாதிப்பு ஏற்பட்டுகிறது. எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்களிட்டவர்களிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக்கூறி நேற்று காலை, 8:00 மணிக்கு ஏரியூர் - முதுகம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏரியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையெடுத்து, 2 மணி நேரத்திற்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
03-Oct-2025