சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்களில் போலீசார் சோதனை
தர்மபுரி, சுதந்தர தினத்தை முன்னிட்டு, தர்மபுரி வழியாக வந்து செல்லும், ரயில்களில், ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும், 79வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் பரிசோதனைக்கு பின், அனுமதிக்கபடுகின்றனர். தொடர்ந்து, சேலம் - பெங்களுரூ மார்க்கமாக வரும், 14 தினசரி எக்ஸ்பிரஸ், 8 வாராந்திர எக்ஸ்பிரஸ், 6 பேசன்ஜர், 2 வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்கள் மற்றும் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி முதல், சேலம் மாவட்டம் ஓமலுார் வரை, தர்மபுரி எஸ்.ஐ., சுந்தரராஜன் தலைமையில், ரயில்வே போலீசார், ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் சந்தோஷ் காவுங்கர் தலைமையில் ஆர்.பி.எப்., போலீசார், 24 மணி நேரமும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.