உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சர்வீஸ் சாலையில் வேகமாக டூவீலர் ஓட்டியோருக்கு போலீசார் வார்னிங்

சர்வீஸ் சாலையில் வேகமாக டூவீலர் ஓட்டியோருக்கு போலீசார் வார்னிங்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், சாலை விதிகளை மதிக்காமல், வாகனம் ஓட்டும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன்படி, மதிகோன்பாளையம் போலீசார் நேற்று, தர்மபுரி அடுத்த குண்டலப்பட்டி பிரிவு சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சர்வீஸ் சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்-களுக்கு அறிவுரை கூறினர். மேலும், இதேபோல் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கபடும் என, 'வார்னிங்' செய்து அனுப்பினர். இதில், மதிகோன்பா-ளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சேகர்,எஸ்.எஸ்.ஐ.,க்கள் முத்து, மாதையன் மற்றும் திருமால் உட்பட போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை