பொங்கல் தொடர் விடுமுறை; போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்
தர்மபுரி: தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கடந்த, 11 முதல், 19 வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. மேலும், தர்மபுரி மாவட்டத்திலிருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றவர்களும் சொந்த ஊர் திரும்பினர். இதில் கடந்த, 11 முதல், 13 வரை மக்கள் கூட்டம் மற்றும் வாகன போக்குவரத்து தர்மபுரி மாவட்டத்தில் அதிகரித்து காணப்பட்டது. கடந்த, 2 நாட்களாக, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் மக்கள் ஆர்வமுடன்ல் ஈடுபட்டத்தால், மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால், தேசிய நெடுஞ்சாலை சாலைகள் மற்றும் தர்மபுரி டவுன் பகுதியில் வாகன போக்குவரத்து மிகவும் குறைந்து, சாலைகள் வெறிச்சோடின.