உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிமென்ட் சாலைக்கு பூஜை

சிமென்ட் சாலைக்கு பூஜை

சிமென்ட் சாலைக்கு பூஜைபாலக்கோடு:பாலக்கோடு அடுத்த ஜெர்த்தலாவ் பஞ்.,ல் அமைந்துள்ள சர்க்கரை ஆலையில், விவசாயிகள் கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள் செல்ல மண் சாலை உள்ளது. மழை பெய்யும் நேரங்களில், இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடும். இதில், கரும்பு லோடு ஏற்றி வரும் டிராக்டர்கள் சேற்றில் சிக்குவதால், விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், 58 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,400 மீட்டர் துார சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பூமி பூஜை செய்து, சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், கோபால், ஒன்றிய அவைத்தலைவர் ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி