உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காலாவதியான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியதால் கர்ப்பிணிகள் அதிர்ச்சி

காலாவதியான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியதால் கர்ப்பிணிகள் அதிர்ச்சி

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில், 8 வட்டாரத்தில், 51 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் வத்தல்மலை, முத்தம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட, 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு கர்ப்பிணிகள் அரசின் உதவி பெறுவதற்காகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும், மருத்துவமனைகளில் தங்களது பெயர்களை பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில், சத்தான உணவு கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகமும், நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, 3 மாத முடிவில் முதல் ஊட்டச்சத்து பெட்டகமும், 5 மாதம் முடிவில், 2ம் ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது.இந்த பெட்டகத்தில், 2,000 ரூபாய் மதிப்புள்ள சத்துமாவு, இரும்பு சத்து டானிக், ஒரு கிலோ பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, டீ கப், பருத்தி துண்டு, நெய், பிளாஸ்டிக் கூடை, உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.இந்த ஊட்டச்சத்து பெட்டகம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 160 கர்ப்பிணிகளுக்கு கடந்த ஜன., 28ல் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட பேரிச்சம்பழம், நெய், சத்து மாவு ஆகியவை காலாவதியாகி விட்டது. குறிப்பாக ஆவின் நெய் ஜன., 5ல் காலாவதியானதை, ஜன., 28ல் வழங்கியுள்ளனர். இதனால் கர்ப்பிணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ