உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு; அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு; அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள் பி.டி.ஓ.,க்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து பயிற்சி வகுப்பு பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, பி.டி.ஓ.,க்கள் அறிவழகன், மார்க்ரெட் முன்னிலை வகித்தனர்.இதில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், தனியார் கட்டடங்கள், ஆகியவற்றிலுள்ள சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது, பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிவது, ஓட்டுச்சாவடிகளின் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துதல், தேர்தல் நாட்களுக்கு முன் மற்றும் தேர்தல் நாள் அன்று செய்ய வேண்டிய நடவடிக்கைகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எப்படி கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !