வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்னொரு பகுத்தறிவுப் பகலவன் உதயம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, 1940 முதல், ஒரு சிறிய அளவிலான கிறிஸ்துவ அறக்கட்டளையை பெண் ஒருவர் நடத்தி வந்தார். அவர், 1998ல் இறந்தார். அதையடுத்து, சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த பால்சீனிவாசன், 54, என்பவர் அறக்கட்டளைக்கு பொறுப்பேற்று நடத்தி வந்தார். அவரின் மனைவி பாலக்கோட்டிலுள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.அறக்கட்டளை சார்பில், ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் என, மூன்று சிறுமி மற்றும் சிறுவனை பால்சீனிவாசன் தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவர்களில், சிறுவன், இரண்டு சிறுமி உட்பட, மூன்று பேர் கல்லுாரி படிப்பிற்காக, வெளிமாவட்டத்திற்கு சென்று விட்டனர்.ஆதரவற்ற, 17 வயது சிறுமி மட்டும் சர்ச்சில் தங்கி பாலக்கோட்டிலுள்ள, அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த வாரம் அப்பள்ளியில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதில், பங்கேற்ற அச்சிறுமி, கதறி அழுததைப் பார்த்த அவரது தோழிகள் விசாரித்தனர்.அப்போது அச்சிறுமி தனக்கு, 13 வயது முதல் சர்ச் பாதிரியார் பால்சீனிவாசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறி, அழுதார். அந்த சிறுமியிடம் சைல்ட்லைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதில், சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டது உறுதியானது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிரியார் பால்சீனிவாசனை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
இன்னொரு பகுத்தறிவுப் பகலவன் உதயம்