உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கடந்த மே, 27ல் வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்த மக்களுக்கு, இதுவரை எந்த பதிலும் சொல்லாத, தாலுகா நிர்வாகத்தை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் விஜி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கணபதி மாவட்ட செயலாளர் முத்து ஆவியூர் பேசினார்.பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் வீட்டுமனை பட்டா கேட்டு, கடந்த மே மாதம் மனு வழங்கப்பட்டது. அதன் மீது வருவாய் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக களாய்வு மேற்கொண்டு, தகுதி உள்ள அனைவருக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்ய, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, தாசில்தார் சின்னாவிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது. அவர், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை