மேலும் செய்திகள்
உதயநிதி பிறந்த நாள் விழா
28-Nov-2024
பாலக்கோடு, டிச. 13-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, அடுத்த பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் படிக்கும், 800 மாணவ, மாணவியருக்கு, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், ஜாமென்டரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதை, தி.மு.க., மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சக்திவேல் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு மேற்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் மாணவர்களின் கல்வி குறித்து பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் முருகன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால், பாலக்கோடு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், முன்னாள் சட்டசபை உறுப்பினர் வெங்கடாசலம், மாரண்டஹள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
28-Nov-2024