மேலும் செய்திகள்
தர்மபுரியில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
16-Nov-2024
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 22---பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கவுரிசங்கர், ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கண்காணிப்பாளர் பழனிசாமி, உதவியாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நீலா வரவேற்றார்.கூட்டத்தில், பிரசவித்த தாய்மார்கள் ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை சாப்பிட வேண்டும். இதற்காக நெய், பேரிச்சம்பழம், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட, 8 பொருட்களை கொண்ட, 2,068 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகத்தை தமிழக அரசு வழங்குகிறது. இதை கட்டாயம் சாப்பிடுவதுடன், குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில், பிரசவித்த தாய்மார்கள், 122 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் வழங்கினார்.நிகழ்ச்சியில், அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
16-Nov-2024