மேலும் செய்திகள்
உதயநிதி பிறந்த நாள் விழா
28-Nov-2024
நலத்திட்ட உதவிகள் வழங்கல்அரூர், டிச. 11- அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், மாம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். இதில், மாணவ, மாணவியருக்கு, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் நோட்டு, பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும், துாய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். நிகழ்ச்சியில், அரூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் செல்லதுரை, மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
28-Nov-2024