மேலும் செய்திகள்
யோகத்தின் 8 படிகள் | Aanmeegam Interview
24-Jul-2025
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டியிலுள்ள வணிக வளாகத்தில், தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய, மாதாந்திர வாடகைக்கு விடுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, தபால் நிலையத்தை, வணிக வளாகத்திலிருந்து காலி செய்ய, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த தபால் நிலையத்திற்கு உட்பட்டு புதுப்பட்டி, பாப்பம்பாடி, ஜாலிக்காடு, கன்னட தாதம்பட்டி, காளிபுரம், நாரணபுரம் பல்வேறு கிராமங்கள் உள்ளன. எச்.புதுப்பட்டியில் இருந்து அலுவலகத்தை மாற்றக்கூடாது. நீண்ட நாட்களாக மக்கள் சென்று வர ஏற்ற வகையில் இந்த அலுவலகம் உள்ளது. எனவே, இதே வளாகத்தில் தொடர வேண்டும் என, அப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
24-Jul-2025