உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மழையால் வாரச்சந்தை வியாபாரம் பாதிப்பு

மழையால் வாரச்சந்தை வியாபாரம் பாதிப்பு

அரூர், 'டிட்வா' புயலால், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த இரண்டு நாட்களாக சாரல்மழை பெய்தது. நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.பின், மதியம், 2:00 மணி முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் சாரல் மழை பெய்தது. நேற்று அரூரில் வாரச்சந்தை என்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.ஆனால் தொடர் மழையால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால், சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ