உள்ளூர் செய்திகள்

அரூரில் மழை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 6:30 மணி முதல், சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், அரூரில் கச்சேரிமேடு, நான்குரோடு உள்ளிட்ட பகுதிகளில் வைக்-கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் பேனர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் காற்றில் துாக்கி வீசப்பட்-டன. திரு.வி.க., நகர், தர்மபுரி சாலை, நான்குரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி-யதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், சூறைக்-காற்று வீசியதால் மின்தடை ஏற்பட்டது. நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை