உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இடி மின்னலுடன் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

இடி மின்னலுடன் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதியில் கடந்த, 2 தினங்களாக வெயில் வாட்டி எடுத்தது. நேற்று மாலை, 5:00 மணி முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 5:30 முதல் பொம்மிடி சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. கன மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. நேற்றிரவு, ஒரு மணி நேரத்தில், 98.8 மி.மீ., மழையளவு பொம்மிடியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை