ராமக்காள் ஏரி அழகுபடுத்த பணி கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட ராமக்காள் ஏரியை துாய்மை செய்து, பூங்கா அமைத்தல், வண்ண மிளிரும் தட்டிகள் அமைப்பது மற்றும் நடைபயிற்சி செய்வோர்க்கு மின்விளக்கு, குடிநீர், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் சாந்தி, துறை சார்ந்த அலுவலர்களுடன், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், நகராட்சி கமிஷனர் சேகர், தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் நடைபயிற்சியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.