ரேஷன் கடை கட்டடம் கட்ட பூஜை
அரூர், டிச. 21- அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட கணபதிப்பட்டியில், 9.97 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.இதில், ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.