மேலும் செய்திகள்
சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு
26-Oct-2024
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பதிக்குமார், 55, தொழிலாளி. இவர் நேற்று மதியம், 2:20 மணியளவில், கிருஷ்ணகிரி-- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அருகே, சாலையை கடந்துள்ளார். அப்போது, திரு-வண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் மோதியதில், சம்பவ இடத்திலே பலியானார். கார் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்-பினர். பதிக்குமாரின் உறவினர்கள், 50க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக கூறி, சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் சமாதானம் செய்து அனுப்பினர். காரில் பயணித்த விருத்தாச்சலம் அருகே உள்ள குட்டம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி, 36, உட்பட, 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாக்கின்றனர்.
26-Oct-2024