வாணியாறு அணையில் உபரிநீர் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணி-யாறு அணை, 65.27 அடி உயரம் கொண்டது.அணையில் நீர் நிரம்பினால், இடது மற்றும் வலதுபுற கால்-வாய்கள் வழியாக, 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரம்பி, 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இதனால், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி கிராமங்-களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணை நீர்மட்டம் தற்போது, 64.19 அடியாக உயர்ந்துள்ளது. மழையால் ஏற்காடு மலையிலி-ருந்து தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், வாணியாறு அணை நீர்-மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் நீர்வரத்து, 75 கன அடியாகவும், அணை நீர்மட்டம், 64.19 அடியாகவும், நீர் இருப்பு, 405.86 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு, 75 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதியிலுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையா-கவும், தங்களது கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடாமல், பாதுகாப்பான பகுதிகளில் வைத்துக் கொள்ளவும், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அணையிலிருந்து உபரி நீர் திறப்பால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.