உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு 14 ஆண்டு சிறை

கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு 14 ஆண்டு சிறை

தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், வர்ணதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த அற்பு-தராஜ், 43, அரூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் மத போதகராக பணி-புரிந்தார். இவருக்கும், அரூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த கண்-ணகி, 50, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 2014 செப்.,4 -அன்று கண்ணகி வீட்டிற்கு சென்ற அற்பு-தராஜ், அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அற்புதராஜ் கண்ணகியை அடித்து, முகத்தில் தலையணையை வைத்து அழுத்-தியதில் கண்ணகி இறந்தார்.கண்ணகி குடும்பத்தார், அரூர் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை முடித்து, இறுதி அறிக்கை தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று, தர்மபுரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், அற்புதராஜூக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி