உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டுகோள்

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டுகோள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக முன்னாள் முதல்-வரும் அ.தி.மு.க., நிறுவன தலைவருமான, எம்.ஜி.ஆரின், 108-வது பிறந்தநாள் விழா நாளை, தர்மபுரி மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதுமுள்ள, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கும், சிலை இல்லாத ஊர்களில் அவரது உருவப்படங்களுக்கும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். அந்தந்த பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும். இதில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பஞ்., கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதேபோன்று தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க. சார்பில், தர்மபுரி கட்சி அலுவலக வளாகத்திலுள்ள, எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு காலை, 10:00 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில், அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ