மேலும் செய்திகள்
வழிகாட்டி பெயர் பலகை வைக்க கோரிக்கை
30-Aug-2025
அரூர், அரூர் கச்சேரிமேட்டில், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, போக்குவரத்து சிக்னல் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி - -திருப்பத்துார் -- சேலம்- - அரூர் நகருக்குள் செல்லும் வழி என, 4 சாலை சந்திப்பு உள்ளது. இவ்வழியாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், கனரக வானங்கள், பஸ், வேன், லாரி மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் தினமும் சிறிய அளவிலான விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சில நேரங்களில் மட்டும் பெயரளவிற்கு போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் இல்லாததை பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி, வேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை குறைக்க சிக்னல் அமைக்கவும், போலீசாரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30-Aug-2025