காட்டு பன்றிகளை விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை
காட்டு பன்றிகளை விரட்டவனத்துறைக்கு கோரிக்கைபாலக்கோடு, டிச. 1-பாலக்கோடு அருகே, விவசாய பயிர்களை நாசம் செய்யும், காட்டு பன்றிகளை -விரட்ட, வனத்துறையினருக்கு விவசாயிகள்- கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவில் உள்ள சென்னப்பன் கொட்டாய், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், திருமல்வாடி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளன. இதில், விவசாயிகள் கரும்பு, நிலக்கடலை, வாழை, கேழ்வரகு, சோளம், தக்காளி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் யானை, காட்டு பன்றி, சிறுத்தை, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதில், வன விலங்குகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்தக்கோரி, விவசாயிகள் வனத்துறையினரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், பாலக்கோடு அடுத்த சென்னப்பன் கொட்டாயை சேர்ந்த, முனியப்பன் என்ற விவசாயி அவருடைய விவசாய நிலத்தில், 2 ஏக்கர் பரப்பில் நாட்டுசோளம் மற்றும் தக்காளி பயிரிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் நாட்டு சோளப்பயிர்களை மிதித்து நாசம் செய்தன. விவசாய பயிர்களை பாதுகாக்க, காட்டு பன்றிகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.