மேலும் செய்திகள்
போலீஸ் நிலையத்தில் காதல் தம்பதி தஞ்சம்
15-Dec-2024
போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
24-Nov-2024
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 24---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்த ஜெயராமன் மகள் பிரேமா, 25. இவர் பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள தனியார், போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அங்கு பாப்பிரெட்டிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் மகன் வித்தீஸ்வரன், 27, என்பவரும் படித்து வந்தார்.வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த, 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் எதிர்ப்பால் கடந்த, 19ல் காலை பிரேமா மாயமானார். பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். கடந்த, 19ல் பாப்பிரெட்டிப்பட்டி முனி சரடு முருகன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்ட பிரேமா, வித்தீஸ்வரன் ஆகியோர், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டு பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் வான்மதி இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
15-Dec-2024
24-Nov-2024