மேலும் செய்திகள்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
03-Apr-2026
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை நித்யா தலைமையிலான குழு பாப்பிரெட்டிப்பட்டி மல்லிகா பேலஸ் திருமண மண்டபம் அருகில் நேற்று காலை, 10:13 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சாமியாபுரம் கூட்ரோடு நோக்கி வந்த அப்பாச்சி பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த, சாமியாபுரம் கூட்ரோடு அண்ணா நகரை சேர்ந்த பாபு, 42, உரிய ஆவணமின்றி, 50,000 ரூபாய் வைத்திருந்தார். அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
03-Apr-2026