ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் சிலம்பரசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் இளங்குமரன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ், வட்ட செயலாளர் தங்கதுரை ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில், 11 பிற துறை அலுவலர்கள் பணிபுரிவதை ரத்து செய்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். மாவட்ட மகளிர் திட்ட அலுவலகங்களில், ஒரு உதவி திட்ட அலுவலர், 2 பணியிடங்கள் வெளிமுகமை மூலமாக நிரப்பப்படுவதை கைவிட்டு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.