உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுங்கசாவடி பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

சுங்கசாவடி பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

சுங்கசாவடி பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு தர்மபுரி, அக். 12-தர்மபுரி மாவட் டம், நல்லம்பள்ளி அடுத்த, பாளையம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்களுக்கான, பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு நிகழ்ச்சி, சுங்கசாவடி திட்ட தலைவர் நரேஷ் தலைமையில் நடந்தது. குற்றவியல் புலனாய்வு இன்ஸ்பெக்டர் கலைவாணி, பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு குறித்து பேசினார். தர்மபுரியை சேர்ந்த சுதாகர் மற்றும் கோமதி ஆகியோர் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர். சாலை பாதுகாப்பு மேலாளர் ஞானசேகர் உட்பட சுங்கசாவடி அலுவலர்கள், போலீசார் மற்றும் சுங்கசாவடியில் பணிபுரியும் பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை