தர்மபுரியில் ஆறாம் ஆண்டு புத்தக திருவிழா தொடக்கம்
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலகத்துறை, தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும், ஆறாம் ஆண்டு புத்தக திருவிழாவை, மதுரா பாய் சுந்தரராஜ ராவ் திருமண மண்டபத்தில், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.விழாவில் அவர் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், புத்தக திருவிழா நடத்த அரசு சார்பில், 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், 60 க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த விழாவில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு பேசினார்.முன்னதாக, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஐந்து வழித்தடங்களில் நீட்டிக்கப்பட்ட டவுன் பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கலெக்டர் சாந்தி, எஸ்.பி., மகேஷ்வரன், டி.ஆர்.ஓ., பால் பிரின்லி ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், ஆர்.டி.ஓ., காயத்ரி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.