உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுதானிய விழிப்புணர்வு பிரசாரம்

சிறுதானிய விழிப்புணர்வு பிரசாரம்

சிறுதானிய விழிப்புணர்வு பிரசாரம்பாப்பிரெட்டிப்பட்டி, அக். 2---தர்மபுரி மாவட்ட வேளாண் துறை சார்பில், சோளம், கம்பு, ராகி, திணை, வரகு குதிரைவாலி, சாமை மர கோதுமை என, சத்தான சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும், சத்துணவை மக்கள் ஒரு வேலையாவது எடுத்து கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சத்துமிகு சிறுதானியங்கள் என்ற தலைப்பில், வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. இந்த வாகனத்தை கடத்துார் பஸ் ஸ்டாண்டில், பேரூராட்சி தலைவர் மணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பொதுமக்களிடையே சிறுதானியங்கள் குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி