மென்திறன் மேம்பாட்டு பயிற்சி
தர்மபுரி:பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறையில், 2 நாள் தேசிய அளவிலான மென்திறன் மேம்பாடு பயிற்சி நேற்று நடந்தது.தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை சார்பில், 2 நாள் தேசிய அளவிலான மென்திறன் பயிற்சி மேம்பாட்டு நிகழ்வு, இலக்கியத்தில் இருந்து தலைமை பண்பு என்ற தலைப்பில் நடந்தது. ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். ஆராய்ச்சி மைய இயக்-குனர் செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். இதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மென்திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் லாவண்யா உரையாற்றினார். அதை தொடர்ந்து, வேலைக்கான நேர்காணல் மற்றும் குழு விவா-தங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும்போது, மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் மற்றும் செயல்பா-டுகள் குறித்து எடுத்துரைத்தார். கவுரவ விரிவுரையாளர் சரண்யா நன்றி தெரிவித்தார்.