பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்பாலக்கோடு, நவ. 22-பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில், பழங்குடியினருக்கான சிறப்பு முகாம், வட்டார மருத்துவர் சிவகுரு தலைமையில் நடந்தது.இதில், பழங்குடியின மக்களுக்கு பிரதமரின் ஜன்தன் வங்கி கணக்கு துவங்குதல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், பழங்குடியின மக்களையும் இணைத்தல், வன உரிமை பட்டா வழங்குதல், இலவச வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, ரேஷன் கார்டு, கறவை மாடு, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், சுகாதாரத்துறை சார்பில், பொது மருத்துவம், உடல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், வருவாய்துறை, மருத்துவத்துறை, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.