உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பச்சையம்மன் கோவில் 8ம் ஆண்டு சிறப்பு பூஜை

பச்சையம்மன் கோவில் 8ம் ஆண்டு சிறப்பு பூஜை

தர்மபுரி, தர்மபுரி அருகே, கொளகத்துாரிலுள்ள, பச்சையம்மன் கோவில் வருடாந்திர, 8ம் ஆண்டு நிறைவு பூஜை நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு பாலக்கோடு திரவுபதியம்மன் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம், மட்டையாம்பட்டி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம், காலை, 10:00 மணிக்கு கலச ஸ்தாபனம், ஹோம பூஜை, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேக சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பச்சையம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று காலை, மேல் முனீஸ்வரனுக்கு கும்ப பூஜை, மஹா தீபாராதனை நடக்கவுள்ளது. நாளை பச்சையம்மானுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, பச்சையம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ