மேலும் செய்திகள்
கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு கோலாகலம்
15-Apr-2025
தர்மபுரி: சித்திரை மாத அமாவாசையையொட்டி, கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, சித்திரை மாத அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆன்மா சாந்தியடைய மக்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில் அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் அதிகாலை முதல் நடந்தன. இதில், புலிக்கரை அருகே கோவிலுாரிலுள்ள குந்தியம்மன் கோவில், கொளகத்துார் பச்சியம்மன் கோவில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர், எஸ்.வி., சாலையிலுள்ள அபய ஆஞ்சநேயர் உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
15-Apr-2025