உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வேடியப்பன் கோவிலில் முளைப்பாலிகை ஊர்வலம்

வேடியப்பன் கோவிலில் முளைப்பாலிகை ஊர்வலம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்கு உட்பட்ட உடையா-னுாரில், பூனைக்கல் வேடியப்பன் சுவாமி, மதுரைவீரன் சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த, 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் கங்கனம் கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 7:30 மணிக்கு பம்பை மேளத்துடன் பெண்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலி-கையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியும், மாலை கலாகர்சணம் கும்பல்காரம், பிரவேச பலி நிகழ்ச்சி நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. ஏற்பாடுகளை உடையானுார், மாவேரிப்பட்டி, மாவேரிப்பட்டி புதுார் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்