உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா

புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடியில் உள்ள புனித அந்தோணியார் தேர்த்திருவிழாவில் நுாற்றுக்கணக்கனோர் பங்கேற்றனர்.பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பொம்மிடியில் அமைந்துள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நடந்தது. கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால், நவநாள் ஜெபங்களுடன் சிறப்பு திருப்பலி நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, திருத்தேர் பவனி நடந்தது. முன்னதாக ஆலயத்தில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, புனித அந்தோணியாரின் அலங்கரித்த தேர் பவனி நடந்தது. வாண வேடிக்கையுடன் துவங்கிய தேர் பவனியை, தர்மபுரி மறை மாவட்ட ஆயர், புனிதநீர் தெளித்து துவக்கி வைத்தார். பொம்மிடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேரின் மீது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை துாவினர். பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ், பங்கு பேரவை தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை