உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமல்வாடியில் பனைகுளம், கிட்டனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்டோருக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமை தொகை, சிட்டா மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட, 15 துறையின் கீழ் மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி முகாமை பார்வையிட்டு உடனடியாக தீர்வு செய்யப்பட்ட மனுக்களுக்கு, நலதிட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை