நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில நடந்தது. ஊரக நலத்துறை இணை இயக்குனர் சாந்தி, டி.எஸ்.பி., மனோகரன், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி கலெக்டர் சதீஸ் முகாமை ஆய்வு செய்தார். முகாமில் பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும், முதல்வரின் விரிவாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரசாரம் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டன.