உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வேலைநிறுத்த போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்ச-வாடி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பொக்லைன் வாகன உரிமையாளர்கள் பொக்லைன் வாகனம் மற்றும் அதன் உதிரிபா-கங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால், வாக-னங்கள் இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரி-வித்து வந்தனர். இந்நிலையில் இன்று ஜூன், 1 முதல் வாகனத்தை இயக்க, குறைந்தபட்சம், முதல், 2 மணி நேர வாடகை, 3,500 ரூபாய் வழங்க வேண்டும். கூடுதலாக ஒரு மணி நேரத்துக்கு, 1,500 ரூபாய் கட்டணம் வழங்க கோரிக்கை விடுத்து, நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தனியார் பள்ளி முன், பொக்லைன் உரிமையாளர்கள் சங்-கத்தினர், தங்கள் பொக்லைன் வாகனங்களை நிறுத்தி, ஒரு நாள் வேலைநிறுத்த போராட்-டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை