உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு வினாத்தாள்களுக்கு பலத்த பாதுகாப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு வினாத்தாள்களுக்கு பலத்த பாதுகாப்பு

தர்மபுரி, தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' எழுத்து தேர்வு நாளை, 12ல் காலை, 9:30க்கு தொடங்கி, மதியம், 12:30 மணி வரை நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 150 தேர்வு மையங்களில், 45,095 தேர்வர்கள் நாளை, 12ம் தேதி தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் நாளை காலை, 8:30 முதல், 9:00 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வருமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் இத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று மாவட்ட கருவூலத்தில் இருந்து அனைத்து தாலுகா அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 21 தேர்வு மையங்களில், 5,966 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கான வினாத்தாள் அடங்கிய பெட்டிகள் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் செந்தில் தலைமையில் நேற்று துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாப்பிரெட்டிப்பட்டி கருவூல அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது. கருவூலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !