உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நவீனப்படுத்தப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்க ஆய்வு

நவீனப்படுத்தப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்க ஆய்வு

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில், புறக்காவல் நிலையம் பூட்டி கிடப்ப-தாக, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, டி.எஸ்.பி., அங்கு ஆய்வு மேற்கொண்டார்.தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீன படுத்தப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு, கடந்த அக்., 24ல் திறந்து வைத்தார். பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், அங்குள்ள புறக்காவல் நிலையம் பூட்-டியே கிடக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மொபைல் போன் திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை பயன்பாட்-டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, நேற்று அரூர் பஸ் ஸ்டாண்டில், டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் புறக்காவல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்-போது, தற்போதுள்ள புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அல்லது ஒரு சில நாட்களுக்குள் பஸ் ஸ்டாண்ட் மையப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்து டவுன் பஞ்., துணைத்தலைவர் தனபாலுடன் ஆலோசனை நடத்தினார். டவுன் பஞ்., நியமன குழு உறுப்பினர் முல்லைரவி உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி