உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளியில் ஒழுங்கீனம் ஆசிரியர் சஸ்பெண்ட்

பள்ளியில் ஒழுங்கீனம் ஆசிரியர் சஸ்பெண்ட்

காரிமங்கலம்,: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், மல்லிகுட்டை பஞ்., ராமியம்பட்டியில், அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த, ஆக., 2ல் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி வளர்ச்சி மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து, கருத்து கேட்கப்பட்டது.அப்போது, அப்பள்ளி உதவி ஆசிரியர் பாலாஜி, பள்ளிக்கு சரியாக வராமல் வேறு ஒருவரை நியமித்து பாடம் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், சக பெண் ஆசிரியர்களிடம் தவறான முறையில் அவர் நடப்பதாகவும் புகார் கூறப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகார்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னமாது, பாலாஜியை, நேற்று முன்தினம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bhaskaran
டிச 09, 2024 17:37

அந்த ஆசிரியர் மைண்ட் வாய்ஸ்.... நான் மாதாமாதம் கப்பம் ஒழுங்கா கட்டியிருக்கேனே எதுக்கு என்மேல் நடவடிக்கை. ஆபீசர் மைண்ட் வாய்ஸ்...சும்மா கண்துடைப்பு நடவடிக்கை அடுத்தமாதம் மீண்டும் பணியுடன்பதவிஉயர்வு கண்டிப்பாக உண்டு ஆனால் கப்பம் பார்த்து கூட போட்டு கொடுங்க......


சமீபத்திய செய்தி