உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மேக்கலாம்பட்டியில் கோவில் திருவிழா

மேக்கலாம்பட்டியில் கோவில் திருவிழா

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மேக்கலாம்பட்-டியில், வேடியப்பன், முத்துவேடியம்மன், போத்தராஜ் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை பூஜை மற்றும் காப்பு கட்டுத-லுடன் துவங்கியது. நேற்று வேடியப்பன், முத்துவேடியம்மன், போத்தராஜ் ஆகிய சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவி-யங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. திருவிழா-வையொட்டி பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தும், கிடா வெட்டி பொங்கலிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்-தினர். பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை கட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன-தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ