பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
பஸ்சில் மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்தவர் கைதுதர்மபுரி, செப். 20- பென்னாகரத்தை சேர்ந்த, 20 வயது மாணவி, கிருஷ்ணகிரி அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு பஸ்சில் பென்னாகரத்திற்கு பயணம் செய்தார். அப்போது, இருக்கையில் அருகில் அமர்ந்திருந்த நபர் மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் மற்ற பயணிகள் வாலிபரை பிடித்து, பென்னாகரம் போலீஸ் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பையர்நத்தம் பகுதியை சேர்ந்த மோகன், 33, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.